இவ்வளவுதானா நீ! (தமிழ் புக்ஸ் )
இவ்வளவுதானா நீ! (தமிழ் புக்ஸ் )
இவ்வளவுதானா நீ! (தமிழ் புக்ஸ் )
எடை: 180 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்: 144 அட்டை: சாதா அட்டை விலை:ரூ. 125 SKU: 978-93-83067-30-5 ஆசிரியர்: சோம வள்ளியப்பன்
45க்கும் மேற்பட்ட மேலாண்மை, மனித வள மேம்பாடு, சுய முன்னேற்றம், பங்குச் சந்தை, பணத்தைப் பெருக்குவது, வணிகம் என்ற பல்வேறு துறைகள் சார்ந்த புத்தகங்களைத் தமிழில் எழுதியுள்ள பொருளாதார மேலாண்மை வல்லுனμõன இவர் எழுதிய ‘பணம் பண்ணலாம், பணம் பணம்’ ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்து லட்சக்கணக்கான வாசகர்களைச் சுண்டி இழுத்து வரலாறு படைத்தது! “அள்ள அள்ளப் பணம்” என்ற நூல் வெளிவந்த வேகத்திலேயே 10,000 பிரதிகள் விற்றதோடு, தமிழில் 1,25,000 பிரதிகளுக்கு மேலும் விற்று சரித்திμம் படைத்தது! இவருடைய எழுத்துகளின் தலைப்புகள் எல்லாமே இப்படித்தான் வித்தியாசமாகப் புதிய பாணியில் இருக்கும். “இட்லியாக இருங்கள்”, “டீன் தரிகிட”, “உஷார்! உள்ளே பார்! “இந்த முறை நீதான்”, “உலகம் உன் வசம்”, “யார் நீ”, “காலம் உங்கள் காலடியில்”, “சின்ன தூண்டில் பெரிய மீன்”, “சிறுதுளி பெரும் பணம்” என்று அடுக்கிக்கொண்டே போகலாம்! தலைப்பு மட்டுமன்று; அதன் பொருளடக்கமும், எழுத்தும், கருத்தும் புதிய அணுகுமுறையுடன் அமைந்திருக்கும். பன்முகம் கொண்ட பல்துறை வித்தகர். பெரிய விஷயங்களையும் எளிய முறையில் கற்றுத்தரும் கல்வியாளர்; பளிச்சென்று மனதில் எதையும் பதிய வைக்கும் பயிற்றுநர்; சாதனைகள் பல படைக்க வழிகாட்டும் மனிதவள மேம்பாட்டு ஆலோசகர். உற்சாகத்தோடு உரமும் ஊட்டும் பேச்சாளர், உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தச் சொல்லித் தரும் வல்லுனர்; நேர மேலாண்மை வித்தகர்; “மேன்மை மைய” ஆலோசனை நிறுவனத்தின் இயக்குனர். பெப்சி, வேர்ல்பூல் போன்ற பன்னாட்டு நிறுவனங்களிலும், பி.எச்.ஈ.எல். போன்ற பொதுத்துறை நிறுவனங்களிலும் பணிபுரிந்து அங்கு மனிதவள மேம்பாட்டை மேம்படுத்தியவர். பல்வேறு கல்லூரிகள், பல்கலைக் கழக மாணாக்கர்களுக்கு மட்டுமல்லாது, தொழில் நிறுவனங்களுக்கும் நவீன மேலாண்மைத் துறைகளில் பயிற்சி அளிப்பவர். தொலைக்காட்சிகளில் பொருளாதாμம் பற்றிய கருத்துக் கணிப்பாளர். பல பல்கலைக்கழகங்களின் தேர்வு மற்றும் கல்விக் குழுக்களிலும், கல்லூரிகளின் பாடத் திட்டக் குழுவிலும், சென்னை நிதி நிர்வாகப் (ஆராய்ச்சி) பயிற்சி நிறுவனத்திலும் பங்கேற்றிருப்பவர்.
Share
- Featured
- Most recent
- Highest ratings first
- Lowest ratings first
- Show photos first