கப்பற்படையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள் (தமிழ் புத்தகம்)
கப்பற்படையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள் (தமிழ் புத்தகம்)
கப்பற்படையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்
ஓய்வுக்குப் பின்னும் வருமானத்திற்கு வாய்ப்புகள் நிறைந்தது
எடை: 260 கிராம்
நீளம்: 215 மி.மீ.
அகலம்: 140 மி.மீ.
பக்கங்கள்:272
அட்டை: சாதா அட்டை
விலை:ரூ.135
SKU:978-93-82577-36-2
ஆசிரியர்:டாக்டர் ம.லெனின்
பெற்றோரும் பிள்ளைகளும் படிக்க வேண்டிய புத்தகம் இது. ஏனென்றால் இந்த நாட்டினால் உங்களுக்கும் உங்களால் நாட்டுக்கும் நன்மை கிடைக்க வேண்டாமா?வீர தீர சாகசங்களுக்கும் இதில் ஏராளமான வாய்ப்புகள் உண்டு. விடுமுறையை உல்லாசமாகக் கழிப்பீர்கள். அவை எல்லாவற்றையும் உங்கள் விருப்பம்போல் அனுபவித்துக் கொண்டு தாய்நாட்டிற்கும் உன்னதச் சேவையை அளிப்பீர்கள்.சீருடைப் பணிகளிலேயே மிக மிகத் தூய்மையான சீருடையை அணிந்து கொண்டு அழுக்குப்படுவதற்கே வாய்ப்பில்லாத சூழ்நிலைகளில் நீங்கள் பணியாற்றலாம்.கடற்படை கண்ணியமாக உங்களை வளர்க்கிறது. இளம் வயதிலிருந்தே உங்களுக்கு வேண்டிய பயிற்சிகளை அளிக்கிறது. உங்களை எதிர்காலத்தில் ஒரு கனவானாக உருவாக்க அது பாடுபடுகிறது. இதில் சேர்ந்தால் நீங்கள் உங்கள் படிப்புத் தகுதியை வளர்த்துக் கொள்ளலாம். சிறந்த மாலுமியாகலாம். போர்க் கலையில் திறம் வாய்ந்தவராக ஆகலாம். எத்தனையோ சாதிக்கலாம்.மிகமிக இளம் வயதிலேயே அரசுப் பணி. கை நிறையச் சம்பளம். சாதனை புரிய வாய்ப்பு. விரைவான பதவி உயர்வு. வேலையை விட்டு ஓய்வு பெற்றாலும் பிற வேலைகளைப் பெறுவதில் முன்னுரிமை அளித்து அழைக்கப்படும் வாய்ப்பு. இப்படி எத்தனையோ விதங்களில் உங்களுக்கு நன்மைகளை வாரிக்கொடுப்பது கடற்படைப் பணி.
Share
- Featured
- Most recent
- Highest ratings first
- Lowest ratings first
- Show photos first