Skip to product information
1 of 1

Faritha

சாண்டோ சின்னப்பா தேவர்

சாண்டோ சின்னப்பா தேவர்

Regular price Rs. 110.00
Regular price Sale price Rs. 110.00
Sale Sold out
Tax included. Shipping calculated at checkout.

 சாண்டோ சின்னப்பா தேவர்

சாண்டோ சின்னப்பா தேவர்

எடை: 210 கிராம்
நீளம்:215 மி.மீ.
அகலம்:140 மி.மீ.
பக்கங்கள்:176
அட்டை: சாதா அட்டை
விலை:ரூ.110
SKU:978-93-82577-61-4
ஆசிரியர்:பா.தீனதயாளன்

இந்த நூலில் பா. தீனதயாளன் அவர்கள் தேவரின் வாழ்க்கையை மிகவும் அழகாகவும் சுவாரஸ்யமாகவும் நமக்குத் தந்திருக்கிறார். அவருக்கு நன்றி!நூலாசிரியர் பா. தீனதயாளன் அடிப்படையில் ஒரு பத்திரிகையாளர். தீவிரமான ஆய்வாளரும்கூட. தமிழ் சினிமாவின் அதிமுக்கிய ஆளுமைகளான சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், ரஜினிகாந்த், கமலஹாசன் ஆகியோரின் வாழ்க்கை வரலாறுகளைப் புத்தகமாகப் பதிவுசெய்திருக்கிறார். இவர் எழுதிக்கொண்டிருக்கும் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறு விரைவில் சிக்ஸ்த்சென்ஸ் வெளியீடாக வரவிருக்கிறது. இப்படி தேவரிடமிருந்து நாம் கற்க வேண்டிய பண்புகளும் பாடங்களும் ஏராளம். சாத்தி” வசூல் இவரிடம் பக்தி கொள்ள வைத்தது. இவரது பெருந்தன்மை லஷ்மிகாந்த், பியாரிலாலை இவருக்குப் பணிய வைத்தது. மாபெரும் ஜாம்பவான்களான ஏவி.எம், வாஹினி, ஜெமினி பட நிறுவனங்கள் கோலோச்சி வந்த திரை உலகத்தை தன்பால் திரும்ப வைத்த பெருமைக்குரியவர். தன் குலத்தவரான சிவாஜிகணேசன் தன் இனம் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளில் அவரோடு தோளோடு தோள் கொடுத்து செயல்பட்டாலும், எம்.ஜி.ஆருக்குத் தான் செய்துகொடுத்த சத்தியத்துக்காக அவரை வைத்துப் படமெடுக்காதிருந்த நேர்மை இவர் புகழை பன்மடங்கு உயர்த்தியது. இவரது பயமில்லாத்தன்மைதான் எல்லோருக்கும் வாத்தியாராக இருந்தவரை இவரை வாத்தியாராக ஏற்க வைத்தது. ஹிந்தி சினிமாவின் கனவு நாயகனான ராஜேஷ் கன்னாவை ”ஹாத்தி மேரா ஒரு சமயம் பெற்றோர் கோயிலுக்கு அழைத்தபோது “மருதமலை சாமியை எப்பப் பார்த்தா என்ன? அந்த இடத்தைவிட்டு மலையும் நகரப்போவதில்லை. சிலையும் பறக்கப் போவதில்லை” என்று கேலி பேசியவரை, ”நான் கல்லில்லை, கடவுள்” என்று முருகன் உணரச் செய்தான். தேவர் குலம் காக்கும் வேலன் காலடிகளை இறுக்கமாகப் பற்றிக்கொண்டார் தேவர். தொட்டதெல்லாம் துலங்கியது. காபி கம்பெனியில் எடுபிடியாக இருந்த தேவருக்கு ஆறு ரூபாய் மாதச் சம்பளம். பின்னர் இரும்புப் பட்டறையில் ஒன்பது ரூபாய் சம்பளத்திற்கு வேலை பார்த்தார். அண்ணனின் வீரமாருதி தேகப் பயிற்சி சாலையில் குஸ்தி பயிற்சியில் ஈடுபாடு. எப்போதும் பசி, பஞ்சம், பட்டினி என்று ஓடிய வாழ்க்கை. ஒன்பது ரூபாய் சம்பளம், யானை வாய்க்கு சோளப்பொறி கொடுத்த கதையாகத்தான் இருந்தது. பெரிய சண்டியர் என்று பெயரெடுத்தவர்தான். என்றாலும், நாணயஸ்தனாக இருக்க வேண்டும் நினைத்ததால் சாப்பிட்டதற்கான கடனைத் தரமுடியாது அடிவாங்கி அவமானப்பட்டார் தேவர். அதனால் ஏழைமையை வென்றுவிட வேண்டும் என்ற வெறி மனத்துக்குள் கனன்றவண்ணம் இருந்தது.

View full details