Faritha
வாழ்வைப் புரட்டும் மந்திரம் (தமிழ் புக்ஸ் )
வாழ்வைப் புரட்டும் மந்திரம் (தமிழ் புக்ஸ் )
Couldn't load pickup availability
வாழ்வைப் புரட்டும் மந்திரம் (தமிழ் புக்ஸ் )
எடை: 260 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்: 224 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.170 SKU:978-93-83067-14-5 ஆசிரியர்: எஸ்.கே.முருகன்
நம்பிக்கை ஒளி பரவட்டும்! சின்ன உளியால் மலையை உடைக்க முடிவதுபோல் சில சொற்களால் வாழ்க்கையை மேம்படுத்தவும் வெற்றிகொள்ளவும் முடியும். ஒவ்வொரு வெற்றியாளருக்குப் பின்னும் ஒரு மந்திரச்சொல் மறைந்திருக்கிறது. சமுதாயத்தின் அடிமட்டத்தில் பிறந்து வெற்றியின் உச்சாணிக்கொம்பை எட்டிப்பிடித்த சாதனையாளர்களின் வாழ்க்கையைப் புரட்டிய மந்திரங்களை தேர்வுசெய்து கொடுத்திருக்கிறேன். மழையும் வெயிலும் மனிதர்களிடம் பாரபட்சம் பார்ப்பதில்லை. அனைவருக்கும் பொதுவாய் படியளக்கிறது. அதுபோல் இந்த மந்திரச்சொற்கள் படிக்கும் அனைவருக்கும் பயன் தரக்கூடியவை. வாழ்க்கையை புரட்டிப்போடும் வல்லமை வாந்தவை. இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள 30 வெற்றியாளர்களின் வாழ்க்கையையும் வெற்றிகொடுத்த மந்திரத்தையும் படித்துப்பாருங்கள். உங்களுக்கும் வெற்றிபெறும் உத்வேகம் பிறக்கும், அதுவே வெற்றியும் கொடுக்கும். வாசகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ள, ‘மந்திரச்சொல்’, ‘வெற்றிதரும் மந்திரம்’ புத்தகங்களின் தொடர்ச்சியாக இந்த, ‘வாழ்வைப் புரட்டும் மந்திரம்’ வெளிவந்துள்ளது. படித்துப் பாருங்கள், உங்கள் உள்ளத்தில் எங்கேனும் நம்பிக்கை வெளிச்சம் தெரிந்தால், அதுதான் என் வெற்றி.
Share

- Featured
- Most recent
- Highest ratings first
- Lowest ratings first
- Show photos first