Skip to product information
1 of 1

JETTY BRA

இந்திய நேரம் 2 AM India Neram 2 AM (Tamil Books)

இந்திய நேரம் 2 AM India Neram 2 AM (Tamil Books)

Regular price Rs. 125.00
Regular price Sale price Rs. 125.00
Sale Sold out
Taxes included. Shipping calculated at checkout.

இந்திய நேரம் 2 AM India Neram 2 AM

எடை: 205 கிராம்
நீளம்: 215 மி.மீ.
அகலம்: 140 மி.மீ.
பக்கங்கள்:168
அட்டை: சாதா அட்டை
விலை:ரூ.125
SKU:978-93-82578-80-2
ஆசிரியர்: பட்டுக்கோட்டை பிரபாகர்

பட்டுக்கோட்டை பிரபாகர், மற்ற எழுத்தாளர்கள் பொறாமைக் கொள்ளும் அளவுக்கு இளமை மிகுந்த தோற்றத்திற்கு சொந்தக்காரர். அவரது தோற்றத்தில் நீடித்திருக்கும் இளமை, அவரது எழுத்துகளிலும் நீடித்திருப்பதே பட்டுக்கோட்டை பிரபாகரின் வெற்றிக்கு காரணம்.

1980களில் பட்டுக்கோட்டை பிரபாகரின் தலையாரி தெரு, பட்டுக்கோட்டை என்ற முகவரி வாசகர்களுக்கு மனப்பாடம். ஆனந்தவிகடனில் தொடராக வெளிவந்த அவருடைய “தொட்டால் தொடரும்”, “கனவுகள் இலவசம்" ஆகிய கதைகள் இன்றும் வாசகர்களால் விரும்பிப் படிக்கப்படுபவை.

அன்றிலிருந்து இன்று வரையிலும் தனது துள்ளலான நடை மற்றும் வசீகரமான கதை சொல்லும் முறையால் அடுத்தடுத்த தலைமுறை வாசகர்களையும் வென்று நூற்றுக்கணக்கான சிறுகதைகள், நாவல்கள், தொடர்கதைகள், தொலைக்காட்சித் தொடர்கள், திரைப்படங்கள் என்று எழுத்தின் அத்தனைத் தளங்களிலும் தனது முத்திரையைத் தொடர்ந்து பதித்து வரும் பட்டுக்கோட்டை பிரபாகரின் புகழ்பெற்ற நாவல்களுள் ஒன்று இந்திய நேரம் 2.A.M.

1986 இல் முத்தாரம் இதழில் தொடராக வந்தது. இதிகாசங்கள் தொடங்கி, சமகால நிகழ்வகள்வரை சமூகத்தில் முக்கியமான பொறுப்பில் இருப்பவர்கள், பிரபலங்கள் தொடங்கி சாமானியர்கள்வரை அந்த ஒரு நொடி சபளத்திற்காக தங்கள் மொத்த வாழ்க்கையின் கடின உழைப்பால் சம்பாதித்த நன்மதிப்பை பணயம் வைக்கத் துணிவது ஏன்? அதுபோன்ற சமயங்களில் அவர்களின் எண்ண ஓட்டம் எப்படியிருக்கும்? என்பதைத் துல்லியமாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார் பட்டுக்கோட்டை பிரபாகர்.

பணம், பதவி, பகட்டு ஒரு தொழிலதிபரை எப்படி சபலம் என்ற சேற்றில் வழுக்கவைத்தது, அதற்கு அவர் கொடுத்த விலை என்ன என்பதை விறுவிறுப்பான கற்பனைக் கதையாக மகேந்திரன் என்ற கதாப்பாத்திரத்தின் மூலம் கச்சிதமான தீட்டியிருக்கிறார்.

View full details
Customer reviews Powered by Audien
Write a review
Powered by Audien
Show more reviews
Customer reviews Powered by Audien
0
0 reviews
Write a review
Powered by Audien
Merchant description
Show more
Featured
Featured
Most recent
Highest ratings first
Lowest ratings first
Show photos first
With photo With video Easy to assemble Attrative design High quality
Show more reviews