நெப்போலியன் Neppoleon (Tamil Books)
நெப்போலியன் Neppoleon (Tamil Books)
நெப்போலியன் -தமிழ் புத்தகம்
எடை: 470கிராம்
நீளம்:215மி.மீ.
அகலம்:140மி.மீ.
பக்கங்கள்:416
அட்டை: சாதா அட்டை
விலை:ரூ.366
SKU:978-93-83067-25-1
ஆசிரியர்:எஸ்.எல்.வி.மூர்த்தி
சாமான்யன் சக்கரத் வர்த்தியான சாதனைச் சரித்திரம்
மாவீரன் நெப்போலியனின் வாழ்கையை இப்படி ஆறே வார்த்தையில் சுருக்கமாக சொல்லிவிடலாம். ஆனால் இந்த ஆறு வார்த்தைகளுக்குப் பின்னால் புதைந்து கிடைக்கும் பேருண்மைகள் அதி ஆழமானவை. அதிக அழுத்தமானவை.
பால்ய காலத்தில் வறுமையைச் சுவைத்து, வெளியில் சொல்ல முடியாத அவலங்களை விழுங்கி வளர்ந்த எந்த ஒரு மனிதனும் விதியின் புதைகுழியில் சிக்கி முகவரியே இல்லாமல் போயிருப்பான். ஆனால் தன்னபிக்கையின் முகவரியாகத் துளிர்த்து, தழைத்து விழுதுவிட்டு வளர்ந்து நின்றவன் நெப்போலியன்.
எதிர்வந்த சிரமங்கள் எப்பேர்ப்பட்டதெனினும் அவற்றை ரோமங்களாகக் கருதி ஊதித் தள்ளும் மனோதிடம் இந்த மாவீரனின் தனிச் சிறப்பு. அந்த மனோதிடமும் தன்னபிக்கையும் நெப்போலியனுக்குள் நிலைபெற்றது எப்படி? என்பதை நுணுக்கமாகப் படம் படம் பிடித்து இருப்பது இந்த நூலின் தனிச் சிறப்பு.
மானவனாக இருந்த போதே மனத்தளவில் போரிட்டுப் பழகியவன். வெறும் சிப்பாயாக தடம் படித்த போதே தலைமைத் தளபதிக்கு இணையாக இயங்கியவன். தளபதியாக உயர்ந்த போதே சக்கரவர்த்தி சிம்மாசனத்தை நோக்கி வீரத்துடன் நகர்ந்தவன் - நெப்போலியன். எப்போதும் வருங்காலத்தை நிகழ்காலத்தில் வாழ்ந்து பார்த்தவன்.
இவண் மெய்யான மாவீரன் மட்டுமல்ல கூர்த்த மதிகொண்ட அரசியல்வாதி; நேர்த்தியான நிர்வாகி; கிடைக்கும் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு முன்னேறிச் செல்வதில் நிகரற்றவன்!
இந்நூலில் எஸ்.எல்.வி. மூர்த்தியின் 'குதிரைப் பாய்ச்சல் மொழி' வெறும் போர்கள் வழியே நெப்போலியனின் வீர பிம்பத்தை கட்டமைக்காமல் ஒரு சாமானியனின் மகன் படிப்படியாக பிரான்ஸின் சக்கரவர்த்தியாக உருவெடுத்த பிரம்மாண்டத்தை தத்ரூபமாக விவரிக்கிறது.
உலகம் போற்றும் ஒப்பற்ற மாவீரனை அங்குலம் அங்குலமாக தரிசிக்கும் பேரனுபவத்துக்குத் தயாராகுங்கள்!
Pages : 416
Price : 366
Author : S.L.V. Moorthy
Publication : Sixthsense Publication
Language : Tamil
Share
- Featured
- Most recent
- Highest ratings first
- Lowest ratings first
- Show photos first